நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கொலைக் கலாசாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு பூராகவும் தொடரும் கொலை சம்பவங்கள் ; எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள் | Murders Continue Across Country Sajith Appeal

இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள்.

நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூடப் பாதிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *