கொலையில் முடிந்த மோதல்: இருவர் வைத்தியசாலையில்கிராண்ட்பாஸின் கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.