மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

அத்தோடு, மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்து தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்புரை 

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தபகுதி மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

தமிழ் மக்களது வாழ்விடத்தில் துப்பாக்கி முனையில் மோசமான தாக்குதல் | Officers Who Assaulted People In Batticaloa

மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (25) இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர்.

அத்தோடு, அங்கு வசித்த மக்களின் குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், அங்குள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

எதிராக நடவடிக்கை 

இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வது போன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். 

தமிழ் மக்களது வாழ்விடத்தில் துப்பாக்கி முனையில் மோசமான தாக்குதல் | Officers Who Assaulted People In Batticaloa

இந்தநிலையில், அப்பகுதி மக்களின் மனித உரிமை, மனிதாபிமானம், என்பன அப்பட்டமான இதன்போது மீறப்பட்டதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த  சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments