தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து அவரின் தந்தை கோப்பாய் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த (08.02.2025) அன்று தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

காவல்துறையினர் விசாரணை

அவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது, நுளம்புத் திரியை பற்ற வைத்த பின்னர் தீக்குச்சியை தவறுதலாக அருகில் உள்ள மண்ணெண்ணெய் கொள்கலன் மீது போட்டதால் அதன்மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் தான் சிக்கியதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை | Jaffna Chava Ads Thamilini Death Investigation

இதையடுத்து, தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது சிசுவையேனும் உயிருடன் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிசுவுடன் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து அவரின் தந்தை கோப்பாய் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments