கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் புகலிடம் மறுக்கபட்டவர்களே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள்

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடு கடத்தியுள்ளதாக முகவர் அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல் | Large People Deport From Canada Including Tamils

இதுவரையான காலப்பகுதிகளை ஒப்பிடுகையில் கடந்த வருடத்திலேயே அதிகளவான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்னர்.

விசிட்டர் விசா

இதில் பல தமிழர்களும் அடங்கும். சமகாலத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல் | Large People Deport From Canada Including Tamils

கடந்த இரண்டு வருடங்களில் விசிட்டர் விசா மூலம் எதிர்பார்த்ததை விட பல மடங்கான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைந்ததுடன், அவர்களில் பெரும்பாலானவர்களில் கனடாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments