தமிழர் பகுதியில் சட்டவிரோத விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைதுமட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற பேர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து,

தமிழர் பகுதியில் சட்டவிரோத விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது | Illegal Brothel In Tamil Area 3 Women Arrested

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிசார் குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்ற பின்னர் குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments