ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) 58ஆவது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழு மீண்டும் ஒருமுறை நாட்டின் மீதான இராஜதந்திர நகர்வை நீட்டித்துள்ளது.

இலங்கை சர்வதேச பொறுப்புக்கூறலை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஒரு போர்க்குற்றவாளியை கூட விசாரிப்பதை மறுக்கும் அதே வேளை, தொடர்ச்சியான மேலோட்டமான நடவடிக்கைகளை இலங்கை வரவேற்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நாவின் கோர் குழு, அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் “அமைதியான தேர்தல்கள் மற்றும் சுமூகமான அதிகார மாற்றத்தை” அங்கீகரித்தது.

இலங்கை அதன் ஆழமாக வேரூன்றிய மனித உரிமை மீறல்கள் மற்றும் தீர்க்கப்படாத போர்க்குற்றங்களை நிவர்த்தி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியது.

இருப்பினும், 2009 இல் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு ஒரு இலங்கை அதிகாரி கூட பொறுப்பேற்கவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகிறது.

ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச வழிமுறைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து நிராகரிப்பது, இலங்கையின் அரசியலுக்கு நல்ல நோக்கம் என கொழும்பு மைய அரசியல் கருதினாலும் – நீதி நிலைநாட்டப்படுவதை தடுக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில் போர்குற்றம் மீதான இலங்கையின் நகர்வுகள் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை தொடர்பிலான அழுத்தங்கள் வலுத்து வருகிறது.

இதன்படி இந்த நகர்வுகள் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது? மற்றும் அரசாங்கம் அதனை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது? என்பதை பிரித்தானிய தமிழர் போரவையின் பொது செயளாலர் ரவியுடன் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு…

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments