சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

சுவிஸ்லாந்தில் குடியுறிமை பெற்ற பெற்றோருக்கு பிறந்த கவின் குறிப்பிட்ட காலப்பகுதி வரை அவர் அங்கு கல்வி கற்றுவந்துள்ளார்.

சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு | Government Orders Swiss Born Eelam Tamil Youth

1990 ஆம் ஆண்டுகளில் அகதியாக சென்று அங்கு புகலிடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து தம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக லுசரில் பிறந்த கவின் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். எனினும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் தந்தையின் விருப்பத்திற்கு அமைய இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு கவின் தந்தையின் குடும்பத்தினரின் குடியுறிமையை சுவிஸ் ரத்து செய்யும் கோரிக்கையை சுவிஸ் குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அவர்கள் இலங்கையர்களாக சுவிஸ்ஸலாந்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் அவர்களது தந்தை உடல் நல குறைவு காரணமாக காலமான பிறகு கவின் மீண்டும் சுவிஸர்லாந்து செல்ல முடிவு செய்தார்.

சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு | Government Orders Swiss Born Eelam Tamil Youth

2024 ஆம் ஆண்டு முகவர் மூலம் சுவிஸர்லாந்து சென்றார். இதன் போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. கையில் தொலைபேசி கூட இருக்கவில்லை.

நண்பனின் தொலைப்பேசி எண்ணை மட்டுமே வைத்திருந்தார். சுவிஸர்லாந்தில் அவர் அகதியாக இருக்கும் நிலையில் அவருக்கு குடியுறிமை வழங்க அரசாங்கம் மறுத்துள்ளது. எனினும் அவர் புகையிர சேவையில் பணியாற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார்.இருப்பினும் அவரை நாடு கடத்துவதாக சுவிஸர்லாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கவின் கூறியதாவது, “நான் சுவிஸில் தான் பிறந்து வளர்ந்தேன்.

இங்கு தான் வாழ்ந்தேன் ஆனால் ஏன் எனக்கு இங்கு தங்க முடியாது” என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கவின் நாடுகடத்தப்பட்டால் அவருக்கு கடுமையான உளவியல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனநல மருத்துவர் எச்சரித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments