வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம் | Shooting At Welivariya

இந்த துப்பாக்கிச் சூட்டில் உடுகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரொருவர் காயமடைந்துள்ளார்.

விசாரணைக் குழுக்கள்

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம் | Shooting At Welivariya

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய காவல்துறையினர் உள்ளிட்ட மூன்று விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *