வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்பு

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

பொதுமக்கள் குறித்த வீட்டில் இரண்டு பேரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்பு | Bodies Of Husband And Wife Recovered From A House

இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் மனைவி 37 வயதுடைய பெருமாள் கௌரி என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments