மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய  இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 24 வயதான விஜேந்திரவடுகே நிராஷா ரசாலி என்ற இலங்கை பெண் என தெரியவந்துள்ளது.

விசாரணை முடியும் வரை அவரைக் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவின்படி, அவர் ஒரு  இலங்கையர் என்பதாலும் அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளமையினாலும் விசாரணை முடியும் வரை அவரைக் காவலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாட்சியங்கள்

சந்தேக நபரின் வாக்குமூலங்கள், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் சிசிடிவி கைப்பற்றல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் கடையில் இருந்து பணத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி | Sri Lankan Woman Remanded In Mal

இருப்பினும், அவர் எவ்வளவு பணம் எடுத்ததார் என்பதை நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments