இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.

கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததுள்ளது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்துள்ளனர்.

மனைவியை தாக்கிய சந்தீப்

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.

ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார். குஞ்சன் இறந்துவிட்டதாக வைத்தியர்களும் அறிவித்துள்ளனர்.

சந்தீப்பை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments