யாழில் (Jaffna) இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ் கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி என்ற வயது 20 வயதுடைய நான்கு மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

தவறான முடிவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார்.

யாழில் கணவன் தாக்கியதால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு | Oung Mother In Jaffna Found Hanging

இதனால், மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *