யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 16ஆம் திகதி இவர் பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்வதற்காக வீதியை கடந்துள்ளார். இதன்போது அதிவேகமாக வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

பின்னர் அவரை வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு | Elderly Man Dies In Motorcycle Collision In Jaffna

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(26) அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments