முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் உள்ள இயேசுநாதர் சிலையில் நீர் வடிந்த அதிசயமொன்று நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில்,  இயேசுநாதர் சிலையின் மார்பு பகுதியில் இருந்து நீர் வடிந்ததாகவும், உடல் நரம்புகள் புடைத்து இருப்பது போன்று நீல நிறத்தில் காணப்பட்டுள்ளது.

நிறம் மாற்றம்

இந்த தகவல் பிரதேசத்தில் பரவியமையையடுத்து குறித்த ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பலர் கூடி பார்வையிட்டிருந்தனர்.

கேப்பாப்பிலவில் இயேசுநாதர் சிலையில் நிகழ்ந்த அதிசயம் | Miracle Of Water Falling Statue Jesus Mullaitivu

குறித்த இயேசுநாதர் சிலையில் இருந்து வழிந்தோடிய நீர் படிப்படியாக குறைவடைந்ததாகவும் , உடலில் நீர் போன்ற கசிவுத்தன்மை காணப்பட்டதனை தொடர்ந்து உருவச் சிலையின் நிறம் மாற்றமும் ஏற்பட்டதாக அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Gallery

GalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments