யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யாழில் தடுப்பூசி போட்ட கைக்குழந்தைக்கு நேர்ந்த கதி ; சோகத்தில் தவிக்கும் குடும்பம் | Fate Of The Infant Who Was Vaccinated In Jaffna

கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்  சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments