முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி கொண்டாடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி காவல் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (08.04.2025) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

சிவநேசதுரை சந்திரகாந்தன் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியாக கைதான பிள்ளையான்: மட்டக்களப்பில் வெடிகொழுத்தி கொண்டாட்டம் | Pillayan S Arrest Celebrated With Cracker In Batti

கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், கைதுக்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *