யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இன்று (09) யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழில் வீட்டிற்குள் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்களுடன் சிக்கிய உரிமையாளர் | A Brothel Operated Indoors In Jaffna

இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments