தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்புபாகம் இரண்டின் ஏழாவதுதொடர்
மகளீருக்கான (7) ஏழாவது பயிற்சி முகாம் பற்றி மூத்த போராளி தீபா

18/08/1985 சோதியா உட்பட அதாவது பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம்.
மகளீர்அமைப்பின் மூத்த போராளி தீபா விபரமாகச் சொல்கின்றார்..!பெண்களை விடுதலைப் போராட்டத்திற்கு உள்வாங்குவதற்கான முதலாவது பயிற்சிக்காக தமிழீழம் இருந்து விடுதலைப்புலிகள் பெண்களை கொண்டுவந்தார்கள். அதைவிட ரெலோ அமைப்பினால் பயிற்சிக்காய் தமிழீழம் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழ் பெண்கள் அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒரு வீட்டில் நின்றார்கள். அதில் நானும் ஒருவராகயிருந்தேன். எங்களை விடுதலைப் புலிகளின் மூத்த போராளி ஒருத்தர் வந்து “கவலைப்படாதோங்தோ” என எங்களிடம் சொல்லி எங்களையும் கூட்டிக்கொண்டு அவர்களின் பயிற்சி முகாமில் இணைத்தார்கள்.
எங்களோடு சேர்த்து சுமார் தொன்னூற்றுஒன்பது போராளிகள் பயிற்சி எடுத்தார்கள். அது விடுதலைப் புலிகளில் 7 ஆவது பயிற்சி முகாமாகவும்; மகளீருக்கான முதலாவது பயிற்சி முகாமாகவும் இருந்தது.

சிறுமலை திண்டுக்கல் என்ற இடத்தில் இப்பயிற்சி முகாம் நடந்தது.முகாம் பொறுப்பாளராக பாரதியண்ணை இருந்தார். மெயின் பொறுப்பாளராக பொன்னம்மான் இருந்தார். நேசன் மற்றும் மனோ மாஸ்ட்டர் உடல் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றினார்கள். போராட்டம் தொடர்பான வகுப்பு எடுப்பவர் இந்திரன். ஜெனகன் மாஸ்ட்டர், திலகர் இவர்கள் போராட்டம் தொடர்பான வகுப்புக்களை எடுத்தார்கள்.மிகவும் வெயில் பிரதேசமாக இருந்தது கடுமையான பயிற்சிதான் எங்களிற்கு வழங்கப்பட்டது ,என அவர்குறிப்பிட்டார். பயிற்சி முடிந்ததும் ஒரு தொகுதிப் பெண் போராளிகள் தமிழீழம் அனுப்பட்டார்கள் அதில் சோதியா தலையிலான குறிப்பிட்ட பெண் போராளிகள் தமிழீழத்தில் கிளாலிப் பகுதியில் நடந்த பெண் போராளிகளின் மகளீர் இரண்டாவது பயிற்சி முகாமமை நடத்தினார்கள், தொடர்ந்து இவர்கள்1987 களுக்குப் பின் தலைவர் வன்னிக்குச் சென்று புனித பூமியல் என்ற முகாமில் இருந்த போது அவரோடு இவர்களும் சென்று வன்னிக்காட்டில் இருந்தார்கள்,, அடுத்து தீபா அவர்களின் தலைமையில் ஒரு அணி லெப்ரின்ட் கேணல் விக்டர் அண்ணையிடம் மன்னார் மாவட்டம் அனுப்பப்பட்டார்கள், அங்கே சென்ற அவர்கள் அவரின் தலைமையில் பல சண்டைகளைப்பிடித்து பெண்களின் வீரத்தை நிலைநாட்டினார்கள்
பெண் போராளிகளின் முதலாவது பயிற்சியோடு தளபதி விக்டர் அவர்களையும் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்

என நினைகின்றேன் லெப் கேணல் விக்ரர் எமது விடுதலை போராட்டத்தில் மூத்த போராளி ஆவர் ஆரம்பதில் எமது போராட்டதில் இணைந்த விக்ரர் 1981 ஆண்டு தேசியத்தலைவரால் உடையார் கட்டு பயிற்சி முகாமில் முதலாவது ஆயுதப் பயிற்சி பெற்றவர்களில் விக்ரர் அவர்களும் ஒருததர் ஆவார், ஆரம்பத்தில் தேசியத்தலைவரின் பாதுகாவலனாகவிருந்த விக்ரர், உமாமகேஸ்வரனின் சதிவலையில் இருந்து தேசியத் தலைவரையும் இயக்கத்தையும் பாதுகாத்த முக்கிய தளபதி ஆவார்,
அடுத்து சிறு சிறு தாக்குதலை செய்து கொண்டிருந்த விக்ரர் செல்லக்கிளி தலைமையானஅணி 1983ம் ஆண்டு யாழ் திருநெல்வேலியில் சிங்களப் படையினருக்கு எதிரான கண்ணிவெடித் தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகித்த தளபதி விக்ரர் அவர்கள் தமிழீழப் பகுதியில் தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிலும் பங்குபற்றியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தியாவில் நடந்த முதலாவது பயிற்சி முகாமிற்கு பயிற்சி எடுப்பதற்காக தேசியத் தலைவரால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட விக்ரர், பயிற்சியை பொன்னம்மானிடம் திறமையாகப் பெற்றுக்கொண்ட விக்ரர், பயிற்சி நிறைவு அடைந்ததும், மன்னார் மாவட்டத்திற்குத் சிறப்புத் தளபதியாக தேசியத் தலைவரால் அனுப்பபட்டார்,
அதைவிட எமது விடுதலைப் போராட்டத்தில் விக்டர் அவர்களின் வழிநடத்தலில் நடந்த அடம்பன் சண்டையில்தான் ஒன்பது இராணுவத்தினரின் உடல்கைளயும் இரண்டு இராணுவச்சிட்டாய்களும் கைது செய்யப்பட்டார்கள், அதை அறிந்த யாழ்ப்பாண மக்களின் கனிசமான இளைஞர் யுவதிகளிடைய எதிரிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது ,மட்டும் இன்றி பலர் எமது விடுதலைப் போராட்டத்தில் இணைந்த வரலாறும் பதிவானது, அதனால்த்தான் எமது தேசியத் தலைவர் விக்ரர் அவர்களிற்கு எமது விடுதலைப் போராட்டத்தில் முதலாவது லெப் கேனல் என்ற உயர்ந்த பதவியை வழங்கினார்,

அங்கே சென்ற விக்டர்
1985ம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத் தகர்ப்பின் பொது பாதகமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது எமது அணியினை நகர்த்தி இடையில் ஒன்று கூட்டி ஒழுங்குபடுத்தி மீண்டும் வேகமாய் நிதானமாய் நகர்த்தி “ராதா ஸ்ராட்”, “குமரன் ” (லெப். கேணல் குமரப்பா) என்று ஆரம்பக் கட்டளைகளை அணித்தலைவர்களுக்கு கட்டளை வழங்கி குறுகிய நேரத்தில் பொலிஸ் நிலையத்தை தாக்கி அழித்து ஒரே ஒரு போராளியின் வீரச்சாவுடன் ஏனையோரை கடல் கடந்து பத்திரமாக கரை சேர்ப்பது வரையில் தளபதியின் வழிகாட்டல் என்பது மறக்கமுடியாத நினைவாகி நிற்கிறது.
அன்றைய வெற்றிகரத் தாக்குதலை பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கும் போது விடுதலைப்புலிகளின் மதிநுட்பமும், துணிவும் நிறைந்த வெற்றிகரத் தாக்குதல் என வர்ணித்தார்கள்
அச்சண்டை முடிந்ததும் மன்னார் மக்கள் அன்றைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தளபதி விக்ரருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து கெளரவித்தனர். பெரும் மகிழ்வுடன் மக்களை வரவேற்றார் விக்ரர் மக்களை வரவேற்கும். உயர்ந்த பண்பு அழகிய தோற்றம், அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி

அடுத்த நடவடிக்கையாக
12,10.1986 அன்று மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதி சுற்றிவளைக்க வந்த நூற்றுக்கணக்கான சிங்களப்படையினரை எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைக் கொண்டு முற்றிலும் பாதகமான சூழ்நிலையிலும்…. அதிகாலை வேளையிலும் “இரண்டில் ஒன்று, அவன் அல்லது நாங்கள்” என்ற துணிவு மிகுந்த வார்த்தைகளை எங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களூடாக வழங்கிவிட்டு களத்திலே நேரில் இறங்கி வியூகம் அமைத்து, ஊடறுத்து, முதலாவதாகப் பெண் போராளிகளையும் அக்களமுனைக்குக் கொண்டு சென்றுஒரு ஊடறுப்புத்தாக்குதலை நடாத்தி தொடர்ச்சியான அவரின் கட்டளைகள்”ஓட விடாதே”, “பார்த்துப் பார்த்து விழுத்து”, “ஹெலியை இறக்கவிடாதே”, இறங்கிய ஹெலியை பறக்கவிடாதே” என்றெல்லாம் தனது சுடுவிரல் அசைவினால் நெறிப்படுத்தி செத்தவன் சாக சாகாமல் இருந்தவனை ஓட்டம் காட்டிஅவர்களின் முற்றுகையை முடியடித்து
அவர்களின் சடலங்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றினார்,விக்ரர்
அச்சண்டையில் இரண்டு சிங்களச் சிப்பாய்கள் சிறைப்.பிடிக்கப்பட்டனர் வெற்றிகரமாக சண்டை நடந்துகொண்டுயிருந்த வேளையில்தான் அந்த துயரமான செய்தி வந்தது எங்கயோ இருந்து வந்த கெலிகொப்டரின் சூடு தளபதிக்குப் பிடித்து விட்டதினால் அந்த கட்டளையிடும் குரல் ஓய்ந்து போனது,
வெற்றிகரமான சூழ்நிலையின் இறுதிக் கணத்தில் தளபதி விக்ரரின் தொடர்பை இழந்து நின்ற அன்றைய சோகம் நிறைந்த நினைவுகளை பகிர்வதில் மனம் நிறைவடைய மறுக்கிறது.

எமது விடுதலை இயக்கம் பிரசவித்த அக்கினி குஞ்சு என்பது மகளிர் படையணியின் வளர்ச்சி பற்றி எமது தலைவரின் வாக்கிற்கு உயிர் கொடுத்த தளபதியாக விக்ரர் அன்று செயல்ப்பட்டார். எமது பெண் போராளிகளுக்கு முதன் முதல் களம் கற்றுக் கொடுத்து இன்று வியக்க வைக்கும் வளர்ச்சியை பெற்று நிற்கும் எமது விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின்முதன்மை வழிகாட்டியாக மூத்த உறுப்பினர் விக்ரரின் செயல்பாடு அமைந்தது,
ஒரு துயிரம் அங்கே நடக்க சிறைப்பிடித்த இரண்டு சிப்பாய்களையும் கைப்பற்றப்பட்ட 09 இராணுவ பொடிகளையும் அவர்களிடம் கைப்பற்றப்பட ஆயுதங்கள் அடுத்து வீரத்தளபதியின் வித்துடலையும்கொண்டு யாழ்பாணம் சென்று தளபதி கிட்டு அண்ணையிடம் ஒப்படைத்தார்கள் விடுதலைப் புலிகள் அடம்பன் சண்டை பற்றியும் கிட்டு அண்ணை என்ன செய்தார் என்பதை மூன்றாம்பாகத்தில் விரிவாகப்பார்ப்போம்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒன்பதாவது பயிற்சி முகாம் இதே காலப்பகுதியில் இதே இடத்தில்தான் நடந்தது. இந்தியாவில் நடந்த விடுதலைப் புலிகளின் 9 தாவது பயிற்சி முகாம் பற்றி போராளி காசன் அவர்கள் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் இருந்த மணியண்ணையின் தோட்டமான
கும்பாறப்யிபிட்டியில் எங்களின் பயிற்சி முகாம் அமைந்துயிருந்தது,
பயிற்சி முகாம் பிரதான பொறுப்பாளராக அப்பொழுது லெப் கேணல் பொன்னம்மான் அவர்கள் இருந்தார், முகாம் பொறுப்பாக அத்தி அவர்கள் இருந்தார் அவரே எங்களிற்கான உடல் பயிற்சிகளைளையும் தந்தார், எங்களுக்கான வகுப்புகளை, மாதவன் மாஸ்ட்டர், கேணல் மனோ மாஸ்ட்டர், இவர்கள் தந்தார்கள்
நாங்கள் 251 போராளிகள் அங்கே பயிற்சி எடுத்தோம் இது 1985 கடைசிப்பகுதியில் நடைபெற்றது தங்களோடு பயிற்சி எடுத்தவர்களை அவர் குறிப்பிடும்போது, 01) பிரிகேடியர்பால்ராஜ், 02 ) பிரிகேடியர் கடாபி, 03) லெப் கேணல் போர்க் 04 ) கப்டன் மில்லர் 05 ) போராளி செபமாலை 06) பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ட்டர் 07) லெப் கேணல் சுமன் இதில் பயிற்சி எடுத பலர் ஆரம்பத்தில் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு மற்றும் உள் நாடுகளிலும் சில குறிப் பட்டவர்கள் வாழ்வதாக அவர் குறிப்பிட்டார்
,அதற்கும் லெப் கேணல் பொன்னம்மான் அவர்கள்தான் பொறுப்பாக இருந்தார். இப்பயிற்சி முகாம் இரண்டு சிறந்த பொறுப்பாளர்களை எமது விடுதலைப் போராட்டத்திற்குத் தந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் கடாபிஆகியோரே….. இதில் பயிற்சி எடுத்தவர்கள் ஆகும்,இப்பயிற்சி முடிந்து தமிழீழம் வந்ததும் ஒரு குறிப்பிட்ட காலம் பெண் போராளிகள் ஆண் போராளிகளாடு இணைந்து சில சண்டைகளிற்குச் சென்றாலும், பிற்காலத்தில் ஆண் போராளிகளின் உதவியின்றி ஆண்களிற்கு நிகராக அவர்களை வளர்க்க வேண்டும் என தலைவர் தீர்மானித்தார்;
அதற்கு அமைவாக பெண்களிற்கான முதல் பொறுப்பாளராக மேஜர் சோதி அவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து பெண்போராளிகள் தனியாக முகாம் அமைத்து வாழத் தொடங்கினார்கள். இதேகாலப்பகுதியில் தான் சிங்கள அரசின் கல்வி தரப்படுத்தலிற்கு எதிராக யாழ். பல்கலை கழகத்தில் உயர்தர மாணவ மாணவிகள் சாகும்வரையான உண்ணா விரதத்தினை ஆரம்பித்தார்கள். அதில் இரு ஆண்கள் உட்பட ஒன்பது மாணவிகள் அடங்குவர். அதில் நான் அறிந்தவற்றைக் குறிப்பிடுகின்றேன். ஜெயா, ஜெனனி, மதிவதனி, வனஜா,தேவி, ஆண்களில் லெப்ரினன் காண்டீபன் உட்பட தலைவரின் மனைவியான மதிவதனி, என்னும் சில மாணவிகள் உணவு தவிர்ந்த சாகும்வரையான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டியிருந்தார்கள்.லெப் காண்டீபன் / எம்பி .சோ, முகவரி குமுழமுனை, முல்லைத்தீவு,பிறப்பு 10/06/1957 இவர் ஒதிய மலையில் படையினரின் பதுங்கித் தாக்குதலின்போது 24/12/1984 அன்று வீரச்சாவு அடைந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னர் இவரின் மனைவியான திருமதி கல்பனா என்பவரைத்தான் தளபதி மாத்தையா திருமணம் செய்து கொண்டார். இது இயக்கத்தின் இரண்டாவது திருமணமாகப் பதிவாகியது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி தரப்படுத்தலிற்கு எதிராக தலைவரின் மனைவியோடு இணைந்து சில மாணவிகளும் அதில் இருந்தனர். அதில் இருந்த ஆண்களில் காண்டீபனும் ஒருவர்.
இவர்களின் முக்கியமான கோரிக்கை
தமிழர்களிற்கு தனியாகப் போடப்பட்ட கல்வித் தரப்படுத்தலை நிறுத்தி சிங்களர், தமிழர் என பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் ஒரே புள்ளிவிபரத்தை அறிவிக்குமாறு கேட்டுயிருந்தனர். அக்காலத்தில் தமிழ் மாணவர்களிற்கு சிங்கள அரசால் இழைக்கப்பட்ட பாரபட்ச ரீதியான செயல்பாடுகளால் தமிழ் மாணவர்கள் கடுமையான கோபம் அடைந்தார்கள்.
ஆனால் சிறீமாவின் சிங்கள அரசு தமிழர்களின்உயர் கல்வியில் கைவைத்தது.
தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும்; என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழகக் கல்வியில் புகுத்தியது.
தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும்.
அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும்; இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம்; தமிழ் மாணவர்களாக பல்கலைக் கழகத்தில் அக்காலத்தில் படித்துக் கொண்டுயிருந்தவர்களான தமிழீழ மாணவ மாணவிகள் ஜெனனி_ பிற்காலத்தில் செஞ்சோலைப்பொறுப்பாராகயிருந்தவர், தேவி_ மூத்த பெண் போராளியாக இருந்தவர்,மதிவதனி__ தலைவரின் மனைவியாவார், இவர்கள் மூவர் உட்பட 9 மாணவிகள் இரு ஆண்களும் அடங்குவார்கள். ஆனால்! யாழ்பல்கலைக்கழகத்தில் கூடுதலான மாணவர்கள் கல்விகற்றாலும் நான் குறிப்பிட்டவர்களிற்கு மட்டுமே தமிழ் தேசிய உணர்வு காணப்பட்டது.
இதனால் இவர்கள் தமிழ் மாணவர்களிற்கு எதிரான கல்வி தரப்படுத்தலை மீளப்பெறமட்டும் யாழ். பல்கலைக்கழகத்தில் சாகும் வரையான உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது எமது இயக்கத்தில் இருந்த பல்கலைக்கழக மாணவரான லெப். கேணல் திலீபன்
அவர்கள் விடுதலைப் புலிகள் சார்பாக தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இதை அறிந்த ரெலோ போன்ற மாற்றுக்குழுக்கள் இவர்களைக் கடத்துவதன் ஊடாக தங்களின் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவை பெறலாம்… என அவர்களின் திட்டமிட்டதை எமது இயக்கம் அறிந்து கொண்டது,
உடனே குண்டப்பா அங்கே சென்று மாணவர்ளோடு உண்மை நிலைப்பாட்டை தெளிவு படுத்துகின்றார்!
” அதாவது நீங்கள் படித்த புத்திஜீவிகள் நீங்கள் சாவதை சிங்கள அரசு விரும்புமேதவிர அதைத் தடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அதை விட உங்களின் நிபந்தனைகளையும் நிறைவேற்ற மாட்டார்கள். அதனால் நாங்கள் முதலில் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வோம். அதற்குப்பின்னர் யோசிப்போம் என தெரியப்படுத்தினார்.
அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இந்தியா சென்றார் குண்டப்பா;
அங்கே சென்றதும் இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் விடப்பட்டார்கள்; அப்போது தலைவர் கீழ் மாடியில் இருந்தார். ஆனால் குறிப்பிட்டகாலம் வரை தலைவர் இங்கே தான் உள்ளார் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது.
அப்பொழுது மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நாங்கள் பிரபாகனை நேரில் கண்டு எங்களின் பிரச்சனையைக் கதைக்க வேண்டும்; அல்லது எங்களை நாட்டிற்கு கொண்டு விடுங்கோ! என பலர் குழம்பிய நிலையில் இருந்தார்கள். இது இப்படி இருக்க மாற்று இயக்கங்கள் “யாழ் மாணவிகளைக் கடத்தி விட்டது! ரைக்கேஸ்” என பெரிய வதந்தியை பரப்பிய வண்ணம் இருந்தார்கள்மாற்றுக் குழுக்கள்
அப்பொழுது குண்டப்பா! “தலைவர் வேறு எங்கையும் இல்லை தலைவர் உங்களோடுதான் இருக்கின்றார்;

“என சொல்லி இவர்களை அவரிடம் கூட்டிக் கொண்டுபோய் விட்டார். அப்பொழுது தலைவர்; “சிங்களவர்களிடம் நாம் சத்தியாக்கிரக நீதியாகப் போராடி எமக்குத் தீர்வு கிடைக்காது”என்கிறார்.
நாம் ஆயுதம் தூக்கிப் போராடினால்தான் எமது சுதந்திரத்தைப்பெற முடியும்; எனவே என்னோடு சேர்ந்து ஆயுதம் தூக்கிப் போராட விரும்புபவர்கள் இங்கே நில்லுங்கள், ஏனையவர்களை உங்களின் வீடுகளில் கொண்டே விடலாம் என தெரிவித்தார்.
அதில் விரும்பிய மாணவிகள் அனைவரும் 7வது பெண்களின் பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.லெப். காண்டீபனும் மற்ற இளைஞனும் விடுதலை புலிகளின் முதலாவது பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அக்காலப்பகுதியில்தான் தலைவருக்கும் மதிவதனிக்கும் காதல் ஏற்பட்டது; ஆனால் மத்திய குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தலைவர் திருமணம் செய்யக் கூடாது என வாதிட்டார்கள்; ஆனால் பாலா அண்ணை “தலைவர் கண்டிப்பாகத் திருமணம் செய்யத்தான் வேண்டும்; அப்படி செய்தால் தான் ஏனைய போராளிகள் சந்தேகம் ஏற்படாதவாறு இயக்கத்தை சிறந்த முறையில் நடத்தலாம் என தெரிவித்தார்”. பாலா அண்ணை சொன்னதுபோல் தலைவருக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தது.
இதைத் தொடர்ந்து சில போராளிகள் இது தவறு என சொல்லி இயக்த்தில் இருந்து வெளியேறினாலும் தலைவரின் வழிநடத்தலை உளமாற ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் புதிதாகஇணைந்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே, அடுத்த நடவடிக்கையாக
1985 ஆம் ஆண்டு தமிழர்புனர் வாழ்வுக் கழகம் இதற்கான அலுவலகம் சென்னை அடையாறு இந்திரா நகரில் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் பொறுப்பாளராக திரு. யோகநாதனும், செயலாளராக திரு. கமலநாதனும், பொருளாராக திரு. சி பரமகுருசாமியும் இயகத்தின் ஆரம்பகால உறுப்பினர் ரகுவப்பாவின் தந்தையார் அவர்களும் தேசியத் தலைவரால் நியமிக்கப் பட்டார்கள்.
மருத்துவத் துறைக்கு பொறுப்பாக டாக்டர் ஜெயகுலராஜாவும், மற்றும் மருத்துவர் பூ. ஆ. விசாகரத்தினம், செல்வி மோகினி விசாகரத்தினம் மற்றும் இவர்களோடு டக்டர் ந. சத்தியமூர்த்தி அவர்களும் தலைவரால் நியமிக்கப் பட்டார்கள்.
இது தூர நோக்கோடு தலைவரால் உருவாக்கப்பட்டது. தமிழீழம் எங்கும் சிறந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இது உருவாக்கப்பட்டாலும்; அக்காலத்தில் தமிழகத்தில் அகதி முகாங்களில் இருந்த எமது தமிழீழ மக்களிற்கான மருத்துவ உதவி மற்றும் பிள்ளைகளிற்கான, கல்வி கற்றலிக்கான உதவிகளைச் செய்வது என அவர்களின் ஆரம்பப் பணியாக அது சிறப்பான முறையில் நடந்தது.
பின்னர் இது தமிழீழத்தில் மிகவும் ஒரு பலமான நிறுவனமாக இருந்தது மட்டும் அல்லாமல் மக்களை தொழில் ரீதியாக ஊக்கப்படுத்துதல், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களை பாதுகாத்தல், என நிறைய வேலைகளை இது பொறுப்பெடுத்துச் செய்து வந்தது.
அனைவருக்கும் வணக்கம்…! இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்பானது; இக்கதையை நாம் ஆவணப்படுத்திவந்தோம். ஆனால் வெளியிடுவதுற்கான தேவையேற்படவில்லை. இருந்தும் “மேதகு 2” படம் வெளிவந்தபின்னர் அதில் பெண் போராளிகளின் இணைவு பற்றியோ; தலைவரின் மெய்ப் பாதுகாவலர்கள் பற்றியோ; அவரின் நல்ல நடத்தைகள் பற்றியோ; அதில் குறிப்பிடவில்லை.
மாறாக அவர் ஒரு கொலைகாரன் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தார் . அது சம்பந்தமாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது! “உயிர் போனாலும் கதைத்தவரின் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்” என தெரியப்படுத்தினார். இன்னொருதரின் போன் நம்பர் அவர் தந்தார். அது வேலை செய்யவில்லை.
இருந்தும் பலர்” போன்” எடுத்து எமக்குக் காரசாரமாகப் பேசினார்கள். அது மட்டும் அல்ல படம் ஓடிய இடத்தில் என்னைப் பார்த்து ஒருதர் காறி முன்னால் துப்பினார். இளநீர் குடித்தவன் தப்பி விட்டான்; கோம்பை சாப்பிட்டவன் சிக்கி விட்ட கதையாகவே இருந்தது. அதனால் நாம் இவ் ஆவணத்தை வெளியிட்டோம். இதில் ஏதாவது தவறு இருந்தாலும் , அல்லது இணைக்கப்படாமல் சில கதைகள் இருந்தாலும், உங்களின் போன் நம்பருடன் உங்களிற்கு தெரிந்த கதைகளை எழுதி கீழே குறிப்பிடும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும். இவ் ஆவணமானது தலைவரால் சொல்லப்பட்டு, ஆரம்ப இராணுவப் பயிற்சி போராளிகளுக்குப் படிப்பித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகின்றேன். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்____wwwtemlnews@gmail.com
அடுத்து பாகம் மூன்றில் தளபதி கிட்டு அவர்களின் செயல்பாடுகள் பற்றிப் பார்ப்போம்
தமிழீழ புத்தகத்தின் முன் அட்டை தொடர்பான கொள்கை விளக்கம். 01) மேலே எமது தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது, இரண்டாவது ஒரு தனி மனிதனாக நின்று இறுதிவரை தான் வரைந்து கொண்ட கொள்கைக்காகத் தனது அயராது. உழைப்பினாலும் தனது தீவிரச் செயற்பாட்டாலும் தனது திறமையாலும் இளைஞர் யுவதிகளை ஒரு அணியில் இணைத்து 30 வருடமாகப் போராடி ஒரு தமிழீழ நடைமுறை அரசாங்கத்தை உருவாக்கிய தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரனின் அவர்களின் படமும் மற்றும் அவருக்கு ஆலோசகராகவிருந்த பாலா அண்ணையின் படம் இணைக்கப்பட்டுள்ளது, தேசியத் தலைவரே எமது விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டியும் தந்தையும் ஆவார்,
02) அடுத்து தூயமான போராட்டம் என்பதை குறிப்பதற்காக வெள்ளைக் கலர் இணைக்கப்பட்டுள்ளது, அடுத்து மேலே உள்ள சிகப்பில் இரு பக்கமும் கறை படிந்தது போல் உள்ளது, அது எமது போராட் வரலாற்றில் தேசியத் தலைவருக்குஎதிராகவும் அவரின் உயரிய கொள்கைக்கு எதிராகவிருந்த துரோகங்களான ஆரம்பகால துரோகிகளான உமாமகேஸ்வரன் அடுத்து, மாத்தையா, அடுத்து யாழ்ப்பாணம் தொடர்பான தகவலை எதிரிக்குக் கொடுத்த ஒப்பிளாமணி, அடுத்து கேணல் சங்கர் அவர்களை கொலை செய்ய எதிரிக்கு உடந்தையாக இருந்த புஸ்ப்பன் இறுதியாக விடுதலை போராட்டத்தை முழுமையாகக்காட்டிக் கொடுத்த கருணா கேபி (KP) போன்றவர்களின் துரோகத்தை அக்கலர் குறிக்கின்றது,
03) அடுத்து தமிழீழக்கதை என்பதை ஆங்கிலத்திலும் அடுத்து அவர்களின் தாகம் தமிழீழத் தாயகம் அதற்காகவே தலைவர் உட்பட ஐம்பதினாயிரம் போராளிகள் தங்களின் உயிரை அர்ப்பணித்தார்கள் என்பதை அது குறிக்கின்றது
புத்கத்தின் பின்பக்கம் பற்றி விளக்கம்
01) மேலே நடுவில் தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்களது அடுத்து மேலே இருபக்கமும் தமிழீழத் தேசிய அடையாளங்களான சிறுத்தை, செம்பகம் உள்ளன, கீழே நெல் வயல்கள், பனை மரங்கள்உள்ளது அது தமிழீழத்தின் தேசிய வருமானத்தைக் குறிக்கின்றது
02) கீழே இரு பக்கமும் தேசிய அடையாளங்களான கார்திகைப் பூ, வாகை மரம் இணைக்கப்பட்டுள்ளது அடுத்து ஐந்து பனை மரங்கள் அதற்கான காரணம் விடுதலைப் போராட்டம் முதலாவதாக யாழ் மாட்டத்தில உருவானது என்பதை குறிப்பதோடு நடுவில் உள்ள உயர்ந்த பனை தேசியத் தலைவரைக் குறிக்கின்றது அடுத்து பக்கத்தில் இருக்கும் இரு பனைகள் இரண்டாவது தலைமையாகவிருந்த லெப் சீலன் மற்றும் லெப் செல்லக்கிளி அம்மான் இருவரையும் குறிக்கின்றது. அடுத்து பதிவான இரண்டு பனைகளும் இரண்டாவது தலைமையாகயிருந்த கேணல் கிட்டு மற்றும் பிரிகேடியர் பொட்டு அம்மானைக் குறிக்கின்றது, இரத்தம் சிந்திய எமது போராட்டம் என்பதை சிகப்பு குறிக்கின்றது தமிழீழம் கிடைக்கவில்லை அது எமது வாழ்நாளில் ஒரு இருள் சூழ்ந்த காலமாகவேயிருக்கும் என்பதை குறிப்பதற்காக தமிழீழ வரைபடத்தில் கறுப்பு இணைப்பட்டுள்ளது நிமலேஸ்வரன் மற்றும் குமரதேவன் இருபரும் உருவாக்கியுள்ளனர் இதை மூத்தபோராளி காந்தன் சரிபார்த்துள்ளார்,

தொடரும்
அன்புடன் ஈழமதி
thaarani