மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் இறந்து கிடந்தனர்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

உடலை அடைய அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை, மேலும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.