தீவிரமான கைதிகள் பரிமாற்றத்திற்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாக ஹமாஸ் (Hamas) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்கவும் ஹமாஸ் படைகள் கோரியுள்ளது.

மேலும், எகிப்து மற்றும் கத்தாரின் மத்தியஸ்தர்களுடன் கெய்ரோவில் ஹமாஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசாவில் போர் நிறுத்தம்

சின்னாபின்னமாகியுள்ள காசாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து இந்த இரண்டு நாடுகளும் செயல்பட்டு வருகிறது. 

பணயக்கைதிகள் விடுவிப்பு : இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம் | Hamas Demands For Hostage Release

இந்த நிலையில் மூத்த ஹமாஸ் அதிகாரி தாஹெர் அல்-நுனு (Taher al Nunu)தெரிவிக்கையில், தீவிரமான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காசா பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறுதல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.ஆனால், போர்நிறுத்தம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸ்

மேலும், பிரச்சினை கைதிகளின் எண்ணிக்கை அல்ல, மாறாக இஸ்ரேல் அதன் உறுதிமொழிகளை மீறுகிறது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதைத் தடுக்கிறது மற்றும் போரைத் தொடர்கிறது என்பதே பிரச்சினை என்று நுனு கூறியுள்ளார்.

பணயக்கைதிகள் விடுவிப்பு : இஸ்ரேலுடனான மோதலில் புதிய திருப்பம் | Hamas Demands For Hostage Release

இதனிடையே, இஸ்ரேல் தரப்பு ஹமாஸ் படைகளுக்கு முன்மொழிதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் இரண்டாம் கட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்ற அமெரிக்காவின் உத்தரவாதத்திற்கு ஈடாக, ஹமாஸ் படைகள் 10 உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

மேலும். ஹமாஸ் படைகள் ஆயுதம் ஏந்தியது பேச்சுவார்த்தைகளுக்காக அல்ல என்றும் நுனு தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments