கனடாவின் (Canada) டொரண்டோ நகர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டொரண்டோ (Toronto) – லோகன் அருகே உள்ள பெயின் அவென்யூவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெயின் அவென்யூவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு ஆண்களை மீட்டுள்ளனர்.

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு - இருவர் பலி | 2 Men Dead After Shooting In Toronto Canada

அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் மற்றொருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்தார் எனவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சந்தேகநபர்கள் இருவரும் இருண்ட ஆடைகளை அணிந்து வித்ரோ பார்க் நோக்கி ஓடிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments