தமிழர் பகுதியில் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தால் பரபரப்புவவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

தமிழர் பகுதியில் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தால் பரபரப்பு | Youth S Body Found Covered In Blood

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடையவர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் கடந்த 14ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments