யாழ். நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

 நூலகத்தை புனரமைக்க நிதி 

“யாழ். நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம்.  நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள்.

அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது. அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம்.

அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன.

சுற்றுலா தளம்

அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம் அதேவேளை யாழ்ப்பாணத்தின் அதன் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம்.

தமிழர் பகுதியில் உச்சம் தொட்ட இனவாத செயற்பாடு! அநுர வெளிப்படை | Extreme Communal Activity In The Jaffna Region

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம்.

அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது , அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது” என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments