இனவாத நோக்கில் செயற்படுவதனாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

உச்சபட்ச இனவாதத்தை பேசிய ஜனாதிபதி அநுர ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Npp Tamil Parties Extreme Gajendra Kumar Alleges

அன்று திஸ்ஸ விகாரையின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாகக் கூறி சிங்கள மக்களைத் திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர்.

எனினும், இன்று மக்களை ஏமாற்றி மக்களின் நலன்களை முன்னிறுத்திப் போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டைச் சுமத்தி அரசியல் செய்கின்றனர்.

இனவாதத்தைத் தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி, தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments