அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக 44 வீதத்தை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது 54 சதவீதம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத அடிப்படை வரிக்கு கூடுதலாக இந்தப் புதிய வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த வரி விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 வரி விகிதம்

இந்த உயர் வரி விகிதம் நாட்டின் பல ஏற்றுமதித் துறைகளுக்கு, குறிப்பாக ஆடைத் தொழில் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா - வரியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு | Trump Tariffs Rule For Sri Lanka Is 54 Percent

இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீண்டும் வரும் வகையில் வரி நிவாரணம் அளிக்குமாறு இலங்கை, அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *