யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது அது வாக்குவாதமாக மாறி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்! | Sword Attack On Family Member In Jaffna

தாக்குதலில் படுகாயமடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *