பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு

பிள்ளையானையும் கருணாவையும் வைத்தே விடுதலைப் புலிகளை அழித்தார்கள் அதனால் அவர்களின்பாதுகாப்புக்கரிதி முன்னைய அரசாங்த்தால் நவின ஆயுதங்கள் வழங்கப்பட்டது, ஆனால் இப்போதைய அரசாங்கம் அவரைக்கொலை செய்தற்கான தடயங்களை எடுத்ததாகக் கூறுகின்றது, அரசின் தவறான செயல்பாடு உன்மையிலே ரணிலை விசாரித்து உன்மை நாட்டு மக்களிற்குத் தெரிவிப்பதே நேரானவளியென நினைக்கின்றேன்,பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள்.

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு | Modern Machine Gun Recovered From Pillaiyan Office

விலையுயரந்த அமெரிக்கத் தயாரிப்பான M-16 நவீன இயந்திரத் துப்பாக்கியில், M203 கிரனேட் ஏவிகள் (grenade launchers) பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கிகள்.

அரச படையினர் கூட சாதாரணமாகப் பாவிக்காத இந்தவகைத் துப்பாக்கிகள் மட்டக்களப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் இருப்பது கண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கிகள் முன்னைய அரசாகத்தின் காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்டதாம்.

இரண்டு துப்பாக்கிகளும், மட்டக்களப்பு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *