யாழில் (Jaffna) வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20.04.2025) மரணமடைந்துள்ளார்.

சாவகச்சேரி – நுணாவில், கைதடியைச் சேர்ந்த 50 வயதுடைய பரராஜசிங்கம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் சகோதரர்கள் நால்வர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு | Family Man Dies In Jaffna

இந்நிலையில், அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்து குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தியுள்ளார். பின்னர் அன்றையதினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.

யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு | Family Man Dies In Jaffna

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments