மன்னாரில் (Mannar) பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம்பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கலவிக்காக கன்னியர் குருமட விடுதியில் நேற்றையதினம் (20) இணைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறை விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் உடலம் மன்னார் மாவட்ட. வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.