தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவு படுத்தியதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் அது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (18.9.2024) மட்டக்களப்பு – கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் வ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் பற்பேற்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கொண்டுள்ளார்.

சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணமும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா, எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை...! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல் | Tamil Common Candidate Election Meeting
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *