தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பமனுவை தாக்கல் செய்திருந்தது.
கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி சுகாஷ், எஸ்.தவபாலன் ஹிந்துஜன் ஆகியோர் இந்த வேட்பு மனுவை வன்னித்தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரி காரியாலயத்தில் தாக்கல் செய்தனர்.
இரண்டாம் இணைப்பு
தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று (9.10.2024) காலை 11.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்தப்பட்டது. வேட்பாளர் பட்டியல் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன்
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் (jaffna) மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
கட்சியில் வி. மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி வி ட்டனர்.
மணிவண்ணன் தரப்பு வேட்பாளர்
இதைத் தொடர்ந்து வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
அந்தவகையில், கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் – விளையாட்டு உத்தியோகத்தர்)
உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.