குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி தனது 16 வயதுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவியின் சகோதரன் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாறை மீது மோதி விபத்து

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரனுடன் வீடு திரும்பி சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு | Road Accident Young Sister Death In Kurunegala

விபத்தில் காயமடைந்த சகோதரனும் சகோதரியும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சகோதரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *