பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று வெளிநாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயொகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


சுதந்திர தினத்தன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! விசாரணையில் அதிர்ச்சியடைந்த பொலிஸார் | Pakistan Independence Day Belgium Girl Abused

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் சாலையோரத்தில் ஒரு இளம் பெண்ணொருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிஸுக்கு தகவல் கொடுத்தனர்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைக்காட்சியிலும் காணொளி வெளியானது.


இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர்.

வைத்தியாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதனையடுத்து ஒரு கும்பல் தொடர்ந்து 5 நாட்கள் அடைத்து வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அந்த பெண் பொலிஸில் தெரிவித்தார்.

இதை கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர். அப்பெண் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் தமீசுதீன் என்பவரை விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் தொடர்பில் பொலிஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *