தமிழீழப்பகுதியில் பரிதாப நிலை சம்பளத்தை மட்டும் வேண்டிக்கொண்டுசிவில் பாதுகாப்பில் கவனம் எடுக்காமல் திரியும் அரச கைக்கூலிகள்?தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் இன்றையதினம் மாலை (30-08-2024) வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்! | Accident On Vavuniya Mannar Road Jaffna Youth Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்! | Accident On Vavuniya Mannar Road Jaffna Youth Died

மேலும், குறித்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் என்ற இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செல்லத்துரை கிருஸ்னபாலமன் என்ற இளைஞரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *