வவுனியாவில் நோயாளர் காவு வண்டிலிருந்து பெண் வைத்தியர் ஒருவர் குதித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தின் போது நாேயாளர் காவு வண்டியின் சாரதி மீது அங்கு கூடியவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர்  நெளுக்குளம் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா – மன்னார் வீதியில் இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தாெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியாசாலையிலிருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் சாப்பாடு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சாப்பாட்டை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுள்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

வவுனியாவில் நாேயாளர் காவு வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்! பரபரப்பு சம்பவம் | Female Doctor Jumped From Ambulance In Vavuniya

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது, அங்கு கூடியவர்கள் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் நாடத்தியதுடன் நெளுக்குளம் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நாேயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் பாெலிஸிற்கு காெண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பாெலிஸிற்கு சென்று நாேயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.

இதேவேளை, குறித்த சாரதி மாற்று வீதியூடாக வைத்தியசாலைக்கு செல்ல வாகனத்தை திருப்பிய பாேதே குறித்த சகாேதர மாெழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.https://www.youtube.com/watch?v=4XqxK-MLtAc

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *