யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் | Jaffna Haitian Protest Illegal Tissa Viharai Begi

குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியில் இருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை.

அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகியது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *