முடிவு எடுக்காமல் காலத்தை இழுத்தமையால் தமிழரசு கட்சிஅங்கத்தவர்களால் தலைமையென்ற பொறுப்பில் இருந்து நிராகரிக்கப்பட்டமாவை?சஜித் தொடர்பான அறிவிப்பு கட்சியின் முடிவல்ல: மாவை சேனாதிராஜா அதிரடிஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறினார்.
இதன்போது கட்சியின் நிலைஇதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக்கட்சி
மேலும், இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும் இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தர்களான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.