யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த வீதித் தடைகள் நேற்றையதினம் (12.11.2024) அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த இந்த வீதித் தடைகள் போடப்பட்டிருந்தது.
சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறு
எனினும், குறித்த வீதித்தடைகள் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.