வித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார்.

இன ரீதியான பாகுபாடு இலங்கையில் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு | No Racial Discrimnation Lanka Government Statement

முஸ்லிம்களுக்கு அமைச்சரவை மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகவும், அது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கம் இந்த விடயத்தில் இன ரீதியான பாகுபாட்டுடன் செயற்படவில்லை என குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் அவர்களின் இயலுமை அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டார்கள்.

அவர்களின் இன அடிப்படையில் அல்ல. அரசாங்கம் இலங்கையர் என்ற ரீதியிலேயே செயற்படுகிறதே தவிர, இன ரீதியில் அல்லவென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments