மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு

நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை ஆக்ரா தோட்டப் பகுதியில் பாயும் ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு | Mother Recovered As A Corpse From The River

உயிரிழந்தவர் 85 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதை, அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரண விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments