மட்டக்களப்பு தன்னாமுனையில் பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விசம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்,தந்தை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் முதுமையில் உடல்நலக்குறைவால் மனைவி ஒரு வருடமாக படுக்கையில் இருந்து வந்த நிலையில் கணவனே மனைவியை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மனைவிக்கும் நஞ்சு கொடுத்து தானும் நஞ்சு அருந்தி, மரணித்துள்ளதாக கூறப்படுகின்றது அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
