தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் ‘நந்தவனத்தில் ஓர் நாள்’என்னும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், ”யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
