கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் நேறையதினம்(04.02.2026) இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அநுர பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
குறிப்பாக இனவாதம் மற்றும் மதவாதத்தினால் எம்வசமுள்ள பலங்களை நாம் சுயமாக அழிப்பதும் பலவீனப்படுத்துவதும் தான் நடக்கிறது. அதனால் எமது நாட்டில் எந்த வித பிரிவினைக்கும், இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கடந்த 76 வருட காலமாக நாட்டில் நல்லது எதுவும் இடம்பெறவில்லை என்று தனது உரைகளில் கூறிய அநுர நேற்றையதின உரையில் இவ்வளவு காலமும் நல்ல விடயங்கள் பலவும் இடம்பெற்றிக்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அநுர ஆற்றிய உரை தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி….
