வவுனியாவில் மாணவனின் உயிரைப் பறித்த விபத்துவவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று (5) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

உந்துருளியில் இரு மாணவர்கள் பயணித்த போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
