இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.

அதன் பின்னர் இந்தத் தடை இந்தியாவால் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.

தடை நீடிப்பு 

ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையானது நீடிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு | Ban On The Ltt Eindia Srilanka Tamil

இந்த உத்தரவை U.A.P.A தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய குழு முன் விசாரணைக்கு வந்துள்ளது.

விசாரணையின் போது, ​​மத்திய அரசு தரப்பில் முன்னிலையான சட்டத்தணி வழங்கை ஒத்திவைக்கக் கோரினார். இதன்படி கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments