நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்தியப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். விஜய் இன் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட சேர்ந்த லண்டன் வாழ் புலம் பெயர் தமிழராவார்.

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட சங்கீதா
லண்டன் வாழ் புலம் பெயர் தமிழரான சங்கீதாவை நடிகர் விஜய் காதலித்து கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர்.
இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விவாகரத்துக்கு காரணம் நடிகை? விஜய் தொடர்பில் சங்கீதா கூறிய தகவல்
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு
குறித்த விடயம் தொடர்பில் விஜய்யின் மனைவி சங்கீதா குறிப்பிட்டுள்ளதாவது, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் கொண்டிருந்தார் .
இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நடிகை ஒருவருடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.
இவ்விடயம் தொடர்பில் கேட்டதால், வீட்டில் தனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டதாகவும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதராங்களை தான் வெளியிடுவதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அதேவேளை விஜய் இன் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
