யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் 2 நூற்றாண்டுகால ஆலயம்; விடுவிக்க கோரிக்கையாழ்ப்பாணம் பலாலி வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக பொது மக்கள் கவலை வெலியிட்டுள்ளனர்.

  மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் இராணுவம்

தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினையடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.

அதேவேளை இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல் விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் 2 நூற்றாண்டுகால ஆலயம்; விடுவிக்க கோரிக்கை | Military 36 Years Palali Rajarajeswari Amman Kovil

பின்னார் போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார்.

பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல் இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் 2 நூற்றாண்டுகால ஆலயம்; விடுவிக்க கோரிக்கை | Military 36 Years Palali Rajarajeswari Amman Kovil

எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள் சமூக அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments