ஈராகில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) ராணுவ விமானம், இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது தவறுதலான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது விமானம்
அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ஈராகின் மேற்கு பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
