அமெரிக்கப் போர் விமானம்ஈரானிய வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெற்றுவரும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் விமானம் வீழ்த்தப்பட்ட நிகழ்வுகள், நடைபெற்றுவரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

ஈரானியப் படைகள்

இதற்குப் பதிலளித்த அவர், “இல்லை, சிறிதும் இல்லை நாம் தற்போது போரில் இருக்கிறோம், அத்துடன் இது போரின் ஒரு பகுதிதான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு சுருக்கமான தொலைபேசி நேர்காணல் வாயிலாக அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதில் இருந்த ஒரு விமானி அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார்.

இத்தகைய போர்ச் சூழலிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் பாதிக்கப்படாது என ட்ரம்ப் கூறியுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments